உள்ளூர் செய்திகள்

அச்சுந்தன்வயலில் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை கணிப்பாய்வு அலுவலர் நந்தகுமார் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உள்ளார்.

வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

Published On 2023-06-21 14:07 IST   |   Update On 2023-06-21 14:07:00 IST
  • வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள் ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், மனித வள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளருமான நந்த குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷின் சமத்துவபுரங்களின் பராமரிப்பு, பிரதம மந்திரி சுவாஸ் யோஜனா, நீலப் புரட்சி திட்டம், பசுமை வீடுகள் திட்டம், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் ஒழுங்கு முறை விற்பனை மையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளில் முடிவுற்ற பணிகள் மேற்கொள்ளப் படும் பணிகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அந்த பணிகளை திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும். முதலமைச்சர் அறிவுரைப்படி அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்பெற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பின் தொடர்ந்து அச்சுந்தன்வயல், தேவேந்திர நல்லூர் பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் நந்தகுமார் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News