உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்துரையாடினார்.

பொதுமக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Published On 2023-11-18 08:41 GMT   |   Update On 2023-11-18 08:41 GMT
  • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.
  • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், சின்ன ஏர்வாடி சமுதாயக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் உணவுப்பொருட்கள் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்தார்.

மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறி கள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ கிச்சை மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதேபோல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்று இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமம், பி.எம்.வலசை பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், படகு சவாரி மேற்கொள்ளும் இடத்தில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏர்வாடி மனநல காப்பகத்தின் செயல்பாடு கள் குறித்தும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்பின் போது கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் , கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்ஆனந்த், ஏர்வாடி ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News