உள்ளூர் செய்திகள்

கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சாபம் விட்ட பொதுமக்கள்

Published On 2023-10-03 12:47 IST   |   Update On 2023-10-03 12:47:00 IST
  • கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சாபம் விட்டனர்.
  • இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே பயிர்காப்பீடு, வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து, கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொன்னக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டியாரேந்தல் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்திய பிரியா தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் அர்சுணன், வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கிய நாதன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத் தில் இப்பகுதி விவசாயி களுக்கு கடந்த 2 ஆண்டு களாக வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத்தொகை அதிகாரிகளின் அலட்சியம், ஒருதலைப் பட்சமான நடவடிக்கையால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

மேலும் மானாவாரி நெல் சாகுபடி செய்த வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்து தங்களது கண்ட னத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News