உள்ளூர் செய்திகள்

சாலையில் கழிவு நீரை கொட்டிய டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு

Published On 2023-07-13 08:14 GMT   |   Update On 2023-07-13 08:14 GMT
  • சாலையில் கழிவு நீரை கொட்டிய 10 டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது.
  • கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இதன் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை யிலும், நகராட்சி குப்பை கிடங்கிற்கு செல்லும் சாலை யோரங்களிலும் பட்டணம் காத்தான் மற்றும் சக்கரக் கோட்டை ஊராட்சி பகுதி வீடுகளில் இருந்து டிராக்டர் களில் எடுத்து வரப்படும் கழிவுநீரை அரசு புறம் போக்கு இடத்தில் அனுமதி யின்றி ஊற்றினர்.

இது குறித்து பட்டணம் காத்தான் வி.ஏ.ஓ., ஜெயகாந் தன் புகாரில் பட்டிணம் காத்தான் இ.சி.ஆர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாரியத்திற்கு அருகேயுள்ள அரசு புறம் போக்கு காலி இடத்தின் அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதி யில், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தும், ககாதார சீர் கேட்டை ஏற்படுத்தி, சுற்றுபுற சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும், நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் கழிவு நீரை ஊற்றி வருகின்றனர். 10 டிராக்டர்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News