உள்ளூர் செய்திகள்

பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமனம்

Published On 2023-08-26 09:04 GMT   |   Update On 2023-08-26 09:04 GMT
  • பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
  • 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதிரி பள்ளி உட்பட 71 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பிலும், 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

கடந்த 2021-2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 97.20 சதவீதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பெற்றது. கடந்தாண்டு கல்வியாண்டில் 95.30 சதவீதம் பெற்று மாநில அளவில் 12-ம் இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தேர்வு விகிதம் குறைந்த தற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது சில மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராமல் கடைசி நேரத்தில் தேர்விற்கு வந்ததாலும், இது போன்று தலைமையாசிரியர்கள், காலிபணியிடம் உள்ள பள்ளிகளில் தேர்வு விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனை யடுத்து உடனடியாக தலைமையாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதில் தற்போது நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 44 அரசு மேல்நிலைப்பள்ளி களுக்கும் தலைமையாசி ரியர் பணிடங்கள் நிரப்பப் பட்டன. மேலும் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்ளை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு உத்தர விட்டது. அதன்படி மாவட்டத்தில் 90 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News