உள்ளூர் செய்திகள்

பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர் கலை படைப்புகளை பார்வையிட்டனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-06-22 13:51 IST   |   Update On 2023-06-22 13:51:00 IST
  • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

கீழக்கரை

கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை யின் பேரில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மற்றும் காகிதம், கண்ணாடி துண்டுகள், தேங்காய் நார், சணல் போன்ற கழிவு பொருட்களில் இருந்து கலை படைப்புகளை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஏராளமான படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியை மிஞ்சும் வகையில் மாணவிகள் நூற்றுக்கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர்கள் கலை படைப்புகளை பார்வை யிட்டு மாணவிகளின் தயா ரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். இறுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News