உள்ளூர் செய்திகள்

கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக் கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பள்ளி மேலாண்மைக்குழுவினா்.

பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

Published On 2023-06-27 08:51 GMT   |   Update On 2023-06-27 08:51 GMT
  • கும்பரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரக் கோரி மேலாண்மைக்குழுவினா் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
  • 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா, துணை தலைவர் தீபா ஆகியோர் முன்னிலையில் மாண வர்களின் பெற்றோர் ராமநாதபுரத்தில் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளியில் 180 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போ தைய அரசு, மாண வர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், சலுகைகளால் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்து தற்போது 400 மாணவர் படித்து வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்களே இன்னும் உள்ளது.

மேலும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்கள் நடத்தப்ப டுவதால் தனித்தனியாக கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இடநெருக்கடியால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மரத்தடியில் பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News