உள்ளூர் செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரனை சந்தித்து பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்-கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-11-10 07:23 GMT   |   Update On 2023-11-10 07:23 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
  • பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார்.பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் கர்ண மஹாராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலமாக புதியதாக 20 இடத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பு சம்பந்தமாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த நிறுவனத்தின் மூலமாக இப்பணி செய்தால் ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் வாழ்வதற்கே பயனற்றதாக ஆகிவிடும். இது போன்ற மக்கள் விரோத மற்றும் இயற்கை வளங்களை அழிக்கக்கூடிய மண் வளங்களை அழிக்க கூடிய இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யும் பட்சத்தில் குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகிவிடும்

ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். எனவே இந்தத் திட்டத்தை ஒருபோதும் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்த விடாது.

ஆகவே இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அதை மீறி நமது மாவட்டத்தில் இத்திட்டத்தை கொண்டு வந்தால் அனைத்து சமுதாயத் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மக்களவை உறுப்பினர் தலைவர் அன்புமணி ராமதாசை அவர்களை வரவழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது

இக்கூ ட்டத்தில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, திருவாடானை ஒன்றிய செயலாளர் மக்தூம் கான். ராமாபுரம் ஒன்றிய செயலாளர் ஷரீஃப்.

மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வழுதூரில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அந்நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை செயல்ப டுத்துவதற்கு மக்களின் எதிர்ப்பு இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News