பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்.
வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- ராமநாதபுரம் அருகே வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே கடலோர பாதுகாப்பு குழுமபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் திருப்புல்லாணி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வாகன சோதனை நடத்தனர்.
அப்போது அந்த வழியாக ரெகுநாதபுரத்தில் இருந்து இ.சி.ஆர். சாலையில் செல்ல முயன்ற ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவரை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர் உத்திரகோசமங்கை சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 50 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளையும், வாகன த்தையும் ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.