உள்ளூர் செய்திகள்

கீழக்கரை கண்மாயில் மணல் எடுத்துச் செல்ல தாசில்தார் சரவணிடம் விவசாயி ஒருவர் விண்ணப்பம் அளித்த காட்சி.

மணல் எடுத்துச்செல்ல 25 விவசாயிகள் விண்ணப்பம்

Published On 2022-08-25 05:33 GMT   |   Update On 2022-08-25 05:33 GMT
  • கீழக்கரை கண்மாயில் மணல் எடுத்துச்செல்ல 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.
  • அனுமதி கோரி சிறப்பு முகாமில் மொத்தம் 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள (நீர் நிலை) கண்மாய்களிலிருந்து விவசாயப் பணிக்கு வண்டல் களிமண், கிராவல் மண் எடுத்துச் செல்வதை எளிமையாக்கும் விதமாக வட்டாரம் தோறும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகிய துறைகள் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கனிம வளத்துறை உதவி இயக்குநர் விஜயகுமார் முகாமை பார்வையிட்டார்.

கீழக்கரை தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 8 கண்மாய்கள், ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள 24 சிறிய கண்மாய்களில் விவசாயப் பணிக்கு மணல் எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனுமதி கோரி சிறப்பு முகாமில் மொத்தம் 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.

இது குறித்து தாசில்தார் சரவணன் கூறும்போது, இங்கு பெறப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் ராமநாதபுரம் கனிம வளத்துறை உதவி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நிலத்தை அளவீடு செய்து அதற்கேற்ப மணல் அள்ள அனுமதி வழங்கப்படும். முறையாக மணல் தோண்டப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றார்.

Tags:    

Similar News