உள்ளூர் செய்திகள்

16-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-06-14 13:28 IST   |   Update On 2023-06-14 13:28:00 IST
  • ராமநாதபுரத்தில் 16-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
  • இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவ னத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக் கேற்ப தனியார்துறை நிறுவ னங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார்துறை நிறுவனங்கள்மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன் பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News