உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு குழுவினர் சார்பில் பேரணி

Published On 2022-09-12 15:00 IST   |   Update On 2022-09-12 15:00:00 IST
  • பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • மருத்துவர் குணசேகரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

தென்காசி:

பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு, சென்ட்ரல் அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

பரமசிவன்,முருகேஷ்,மதியழகன் முன்னிலை வகித்தனர். கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவருமான கே.ஆர்.பி. இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் அருணாச்சலம் வரவேற்றார்.

பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அனுஷா, மாதுரி, ஆபா, கண்தான விழிப்புணர்வு குழு கவுரவ ஆலோசகர் ஜெயச்சந்திரன், கண் வங்கி ஒருங்கிணைப்பாளர் சாரதா, கண்தான விழிப்புணர்வு குழு துணைத் தலைவர் முருகன், முன்னாள் செயலர் ஆனந்த், கலைச்செல்வன், சங்கரபாண்டியன் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் முன்னாள் செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News