உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நவகிரகங்கள்.
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா
- 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
மூலவர் ரத்தினகிரீஸ்வரர்- வண்டுவார்குழலி அம்மன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.