உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் 1,500 ரூபாயாக ஆக உயர்வு:கலெக்டர் பாலசுப்ரமணியம் தகவல்

Published On 2023-01-27 07:01 GMT   |   Update On 2023-01-27 07:01 GMT
  • 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
  • சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ர மணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனு டையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் 18,047 மாற்றுத்திறனுடைய பயனாளிகளுக்கு 2023 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2023 ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 கிடைக்கப் பெறாத சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவீதம் மாற்றுத்திறன் உடையோர் எவரும் இருந்தால், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்களது வட்டத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News