உள்ளூர் செய்திகள்

அக்கச்சிப்பட்டி பள்ளி மாணவ, மாணவிகள்மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு

Published On 2023-10-24 11:50 IST   |   Update On 2023-10-24 11:50:00 IST
கந்தர்வகோட்டை வட்டார அளவிலான கலை போட்டியில்

கந்தர்வகோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், வட்டார அளவிலான கலைத்திரு விழா போட்டி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் செளமியா, பல்குரல் போட்டியில் தரணிகா, தனிநடன போட்டியில் கல்பனா, செவ்வியல் நடனம் தனியொரு பிரிவில் ரித்திகா ஆகியோர் முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். களிமண் சுதை வெளி ப்பாடு சிவகார்த்திகேயன், தோல்கருவிகள் கபிலன் ஆகியோர் மூன்றாவது இடமும் பெற்றனர்.நாடக குழுவில் சாலை பாதுகாப்பு என்ற நாடகத்தில் தீபக் தலைமையிலான குழுவில் தீபக்குமார், ஆசியா, தமிழரசன், கிரித்தீஷ், வீரலட்சுமி, ஹரிசேகரன், ஆகியோர் நடித்த நாடகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச் சாமி, தனலெட்சுமி, கெளரி ஆகி யோர் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News