உள்ளூர் செய்திகள்
தெரு விளக்குகள் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- சிங்கமுத்து அய்யனார் குளக்கரை பகுதியில் தெரு விளக்குகள் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- இந்த வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் சிங்கமுத்து அய்யனார் கோவில் குளக்கரை பகுதி வழியாக நாரிமேடு, சமுத்துவபுரம்,லெட்சுமி நகர்,வெங்கடேஸ்வரா நகர், தைலா நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை செல்கிறது. இந்த வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அவ்வழியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ச்சியாக எரியாத நிலை உள்ளது. எனவே அவ்வழியாக மக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர் .அப்பகுதி கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக நகர்மன்ற கூட்டத்தில் முறையிட்டப்படியே உள்ளனர். இருப்பினும் தெரு விளக்குகள் எரிந்தபாடு இல்லை. அப்பகுதி சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் சூழலும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.