உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதி கேசராபட்டியில்ராமருக்கு பட்டாபிஷேக வைபவம்
பொன்னமராவதி,
பொன்னமராவதியை அடுத்த கேசராபட்டியில் ராமாயணம் படித்து சாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக மழை வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும்,சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க வேண்டியும் கிராமத்தின் பல்வேறு நன்மைக்காக திருவிளக்குப்பூஜை நடந்தது. கேசராபட்டி பிடாரியம்மன் கோயிலில் கடந்த 7ம் தேதிமுதல் ஏடுபடித்தல் என்று சொல்லக்கூடிய ராமாயணம் படிக்கப்பட்டு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு வைத்தும், திருவிளக்குப்பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். மேலும் இரவு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கேசராபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.