உள்ளூர் செய்திகள்

இருதய நோய் பரிசோதனை முகாம்

Published On 2023-09-30 12:16 IST   |   Update On 2023-09-30 12:16:00 IST
  • புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்இருதய நோய் பரிசோதனை முகாம்
  • எக்கோ ஸ்கேன் பரிசோதனை செய்தார்.

புதுக்கோட்டை, 

இருதய தினத்தை முன்னிட்டு டீம் மருத்துவமனை சார்பில் உலக இருதய நோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. டீம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கே.எச்.சலீம் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் இருதய நோய் சிறப்பு மருத்துவர் எம்.ஆர்.வெங்கடேசன் இருதய எக்கோ ஸ்கேன் பரிசோதனை செய்தார்.

இருதய நோய் தின சிறப்பு சலுகையாக இசிஜி, எக்கோ(இருதய ஸ்கேன்), ஹீமோகுளோபின், இரத்தத்தில் சர்க்கரை, யூரியா, கிரியாட்டினன், கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைடு, சிறுநீரில் சர்க்கரை மற்றும் அல்புமின் போன்ற ரூ.3000 மதிப்புள்ள பரிசோதனைகள் ரு.750க்கு செய்யப்பட்டது. ஏராளமான பேர் இதனால் பயன்பெற்றனர். இந்த முகாம் திங்கட்கிழமை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News