உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

Published On 2023-09-29 06:28 GMT   |   Update On 2023-09-29 06:28 GMT
  • அறந்தாங்கி அருகே வேட்டணிவயல் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு
  • வகுப்பறை கட்டிடத்தை பழுது நீக்கித் தரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்திருந்தார்.

அறந்தாங்கி, 

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற காலை உணவுத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மணமேல்குடி தாலுகா வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா, குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர், தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், இடைநிலை ஆசிரியர் கலைமணி ஆகியோர் பள்ளிக்குழந்தைகளோடு அமர்ந்து உணவு உண்டனர். அப்போது ஒன்றியக்குழு தலைவர் பரிந்துரையின் பேரில் பழுதாகியுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்தை பழுது நீக்கித் தரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்திருந்தார்.

Tags:    

Similar News