உள்ளூர் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ரமேஷ் (வயது 30). விவசாய கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் முன்பு நடந்து சென்றார், அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த வடகாடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயரிழந்த ரமேஷின் உறவினர்கள் விபத்து ஏற்படுத்தி சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானமான அவர்கள் அங்கிருந்து கலைந்து ெசன்றனர்.