உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிதிருடியவர் கைது-லாரி பறிமுதல்

Published On 2023-11-06 14:31 IST   |   Update On 2023-11-06 14:31:00 IST
  • பொன்னமராவதி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் ஸ்டீல் கடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருடப்பட்டது
  • கைது செய்யப்பட்ட டீசல் முருகேசன் இதே போன்ற 77 கம்பித்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னமராவதி

பொன்னமராவதி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் ஸ்டீல் கடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருடப்பட்டு விட்டதாக கடையின் உரிமையாளர் சாதிக் பாட்சா அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான காவல்து றையினர் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தடயங்களை கைபற்றி தொடர்ந்து நடத்திய விசாரணையில் கம்பிகளை திருடிய புதுக்கோட்டை பூசத்துறையை சேர்ந்த டீசல்முருகேசன்(வயது 54) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட டீசல் முருகேசன் இதே போன்ற 77 கம்பித்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News