உள்ளூர் செய்திகள்

வாராந்திர சுகாதார திருவிழா

Published On 2023-10-12 12:21 IST   |   Update On 2023-10-12 12:21:00 IST
  • விராலிமலை அரசு மருத்துவமனையில் வாராந்திர சுகாதார திருவிழா நடைபெற்றது
  • 20 பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையும் குடும்பநல அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்த பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

விராலிமலை, 

சுகாதாரத்துறை சார்பில் ஆயுஷ்மான் பவ என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி விராலிமலை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற வாராந்திர சுகாதார திருவிழாவிற்கு தலைமை மருத்துவர் கோமதி தலைமை தாங்கினார்.இதில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ரத்தசோகை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 20 பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையும் குடும்பநல அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்த பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை செய்யப்பட்து.மேலும் சுகாதார திருவிழாவில் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு மற்றும் வாய்புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யபட்டு மருந்துகள் வழங்கபட்டன. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திராளான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா்.அவர்களுக்கு மருத்துவா்கள் தீபக்ராஜ், பானுப்பிரியா, ஜோஷி ஹெலன் ஆகியோா் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனா்.

Tags:    

Similar News