உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் வாகன போக்குவரத்து மாற்றம்

Published On 2023-11-09 14:00 IST   |   Update On 2023-11-09 14:00:00 IST
  • புதுக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றம்
  • கடை வீதிகளில் அதிகளவு கூட்டம் காரணமாக நடவடிக்கை

புதுக்கோட்டை,

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் கடை வீதிகளில் கூட்டம் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, பால்பண்ணை ரவுண்டானா, சங்கரமடம் வீதி, வடக்கு 4-ம் வீதி வழியாக செல்லும்.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வரும் பஸ்கள் வடக்கு 3-ம் வீதி, திலகர் திடல், பால்பண்ணை ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடையும்.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம், பேராங்குளம் வழியாக செல்லும். மேற்கண்ட தகவலை நகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News