உள்ளூர் செய்திகள்
- பூமிநாதர் கோயிலில் வாஸ்து பூஜை நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் ஆரணவள்ளி சமேத பூமிநாதர் கோயிலில் வாஸ்து நாளையொட்டி ராஜப்பா குருக்கள் தலைமையில் சிறப்பு யாகபூஜைகள் மற்றும் பூமிநாதர் ஆரணவள்ளி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செவலூர் பூமிநாகர் ஆரணவள்ளி வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக வாஸ்துநாள்களில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.