உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் -அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய கோரிக்கை

Published On 2023-03-03 06:17 GMT   |   Update On 2023-03-03 06:17 GMT
  • கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய கோரிக்கை விடுத்தனர்
  • ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசும் பொழுது உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. ஆணையர்கள் திலகவதி, நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கந்தர்வகோட்டை பேருந்து நிலைய பணிகளை உடனடியாக தொடங்கிடவும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள விளக்குகளை பழுது பார்த்து ஒளிரச் செய்யவும், சாலையின் நடுவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், காவேரி கூட்டு குடிநீர் விநியோகம் முறையாக விநியோகிக்க கூறியும் உறுப்பினர்கள் பேசினார்கள்.

கந்தர்வகோட்டை தலைமை மருத்துவர் ராதிகா பேசும் போது, கந்தர்வகோட்டைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து தரக் கூறி கோரிக்கை விடுத்தார்.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன். ராஜேந்திரன் கலியபெருமாள், பாரதிபிரியா அய்யாத்துரை, திருப்பதி, முருகேசன்மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசும் பொழுது உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Tags:    

Similar News