உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்

Published On 2022-09-12 12:41 IST   |   Update On 2022-09-12 12:41:00 IST
  • புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
  • புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இலைகடிவிடுதி ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள சிமெண்டு சாலை குறுகலான நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைத்து கால்வாய்வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100கும் மேற்பட் டோர், கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியில் புதுக்கோட்டை- கறம்பக்குடி பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகலறிந்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News