உள்ளூர் செய்திகள்

அக்காளை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி கைது

Published On 2022-09-18 11:36 IST   |   Update On 2022-09-18 11:36:00 IST
  • அக்காளை கத்தியால் குத்திக்கொன்ற தம்பியை கைது செய்தனர்
  • செய்வினை செய்ததாக கூறி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் அருகே உள்ள வைத்திக்கோவிலை சேர்ந்தவர் வடிவேலு (வயது 76), விவசாயி. இவரது மனைவி மாரிக்கண்ணு (55). இவருடைய பெரியப்பா சின்னையா மகன் குணசேகரன் (49). இவருக்கு திருமணமாகவில்லை. மேலும், இவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து உள்ளார். மாரிக்கண்ணு வீட்டின் அருகே வசித்து வந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் அவர் தினமும் சாப்பாடு வழங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில் ேநற்று காலை வீட்டின் வழியே மாரிக்கண்ணு சென்றபோது அவரை அழைத்த குணசேகரன் எனக்கு தினமும் சாப்பாட்டில் செய்வினை செய்து நீ தானே கொடுக்கிறாய் என கூறி திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்தபோது அவரது இடது கையிலும் வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். பின்னர் அவர் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News