கோடியக்கரையில் ஒதுங்கிய இலங்கை படகால் பரபரப்பு
- கடலோர பாதுகாப்பு குழு, வனத்துறை, காவல்துறையினர் படகில் இருந்து என்ஜினை துண்டித்தனர்
- இலங்கையில் இருந்து வந்தவர்கள் யார் என்று தீவிர விசாரணை,
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மணமேல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் மர்மமான முறையில் இலங்கையை சேர்ந்த ஃபைபர் படகு ஒன்று நங்கூரமிடப்பட்டுள்ளதை மீனவர்கள் கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், காவல்துறை யினர் ஆகியோர் இலங்கை படகு நின்ற பகுதிக்கு சென்று படகை ஆய்வு செய்தனர். ஆய்வில் இலங்கையை சேர்ந்த 40 குதிரைதிறன் கொண்ட அதிவிரைவு பைபர் படகு என்பதும், அதில் டீசல் கேன்கள், 2 சட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து படகை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், படகிலிருந்து எஞ்சினை தனியாக பிரித்து யாரும் இயக்காதவாறு செய்தனர். மேலும் அந்தப் படகில் யாரேனும் இலங்கையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்களா, வேறு ஏதேனும் மர்ம பொருட்கள் கடத்தி வரப்பட்டதா, அல்லது பழுதாகி காற்றில் இழுத்து வரப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் விசார ணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ராமேஸ்வரத்தில் சேட்டிலைட்செல்ஃபோன் கண்டெடுக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், மணமேல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் இலங்கையை சேர்ந்த 40 குதிரை திறன் கொண்ட அதிவிரைவு ஃபைர் படகு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், அச்ச த்தையும் ஏற்படுத்தியுள்ளது.