உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டை முருகன் கோவில்களில் தைப்பூச விழா
- கந்தர்வகோட்டை முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது
- சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டி அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அதேபோன்று கந்தர்வகோட்டை சுப்பிரமணியர் கோவில், தச்சங்குறிச்சி முருகன் கோவில், வடுகப்பட்டி முருகன் கோவில், வங்கார ஓடை குளக்கரை விநாயகர் ஆலயத்தில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.