- பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி ஆண்டிக்கோண்பட்டி கிராமத்தை வேர்ந்தவர் மாரிமுத்து மகன் விக்ரம் (வயது 19). இவர் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து இறந்து விட்டார். இவருக்கு மனைவி கலா (35) மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விக்ரம் கடந்த 24ம் தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பூஞ்செடிக்கு அடிப்பதற்கு வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருத்து குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் விக்ரம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவரது உடல் பிரதே பரிசோதனை செய்த பின்னர் அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து மாரிமுத்து மனைவி கலா ஆலங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.