உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனம்

Published On 2023-05-01 06:49 GMT   |   Update On 2023-05-01 06:49 GMT
  • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் நடைபெற்றது
  • வட்டார கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை குறித்த வாகன பிரச்சாரம் நடைபெற்றது. அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆடல் பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் என்னும் எழுத்தும் திட்டம், அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், சுரேஷ்குமார், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா மற்றும் பள்ளி மேலாண்மைகுழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Tags:    

Similar News