உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடைகளை அகற்ற போராட்டம்

Published On 2023-07-17 11:24 IST   |   Update On 2023-07-17 11:24:00 IST
  • டாஸ்டாக் கடைகளை அகற்ற கோரி பஞ்சாயத்து தோறும் போராட்டம் நடத்தப்படும் என்று புதுக்கோட்டை பாஜக அறிவித்துள்ளது
  • புதுக்கோட்டை பா.ஜ.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, 9 ஆண்டுகளில் பாஜக மக்களுக்கு செய்துள்ள நல்ல திட்டங்களை மக்களுக்கு புரிய வைக்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் வருகிற 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து, பிரச்சினைகளை முன்வைத்து புதுக்கோட்டையிலும் அனைத்து பஞ்சாயத்துகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு இரட்டடிப்பு செய்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும்அவற்றை நிறுத்தவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் குடும்ப பெண்களுக்கு உரிமை தொமை ரூ.1000 தரப்படும் என அறிவித்துவிட்டு தற்போது அதை நிறைவேற்ற பல்வேறு கண்டிசன்கள் போடப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து வாரியாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே பஞ்சாயத்துகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற முக்கியமாக போராட்டம் நடத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்றிருந்தோம். ஆனால் தற்போதைய நிலையில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராக வருவார்.பாஜக நிர்வாகிகள் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை பொய் வழக்குகளை போட்டு வருகிறது. பிரதமர் அனைவருக்கும் 15 லட்சம் தருகிறேன் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக உதயநிதிஸ்டாலின் கூறிவருகிறார். அவர் நீட் ரகசியம் தெரியும்என்றார் அதை தெரிவித்தாரா? என்று கூறினார். பேட்டியின் போது பழ.செல்வம்குருஸ்ரீராம், கார்த்திகேயன், கோவேந்திரன், சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர் .

Tags:    

Similar News