விவசாயிகளுக்கு மிளகு சாகுபடி பயிற்சி கருத்தரங்கம்
- விவசாயிகளுக்கு மிளகு சாகுபடி பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
- 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
மலை சார்ந்த இடங்களில் மட்டுந்தான் மிளகு சாகுபடி செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி ஆலங்குடி பகுதி விவசாயிகள் சமவெளியி லும் மிளகு விவசாயம் செய்ய முடியும் என நிரூபித்திருந்த நிலையி ல், காவேரி கூக்குரல் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளுக்கு சமவெளியில் மிளகு சாகுபடி கள பயிற்சியும், கருத்தரங்கும் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு விழாவை தணபதி (தலைவர் இந்திய விவசாய சங்கம்) பரத் சீனிவாசன், (போலீஸ் துணை சூப்பிரண்டு) மரம் கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பல வருடங்களாக மிளகு சாகுபடி செய்து வெற்றிகரமாக மிளகு உற் பத்தி செய்து வரும் பால்சாமி, ராஜாகண்ணு, பாக்கியராஜ், செந்தமி ழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் அனுபவங்க ளை கருத்தரங்கில் பிற விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் ராமசிவக்குமார் மற்றும் கூடுதல் இயக்குனர் செந் தில்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக காவேரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயிகளையும் அதிகாரிகளையும் வரவேற்றார். மேலும் கரு த்தரங்குக்கு வந்திருந்த விவசாயிகள் அனைவரும் வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மிளகு சாகுபடி பயிரிட்டிருந்த தோட்டத்தில் மிளகு செடிகளை பார்வையிட்டனர்.
இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநில விவசாயிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.