உள்ளூர் செய்திகள்

எஸ்.டி.பி.ஐ.கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-24 12:44 IST   |   Update On 2022-08-24 12:44:00 IST
  • எஸ்.டி.பி.ஐ.கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது
  • சாலை வசதி கோரி நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார் டுகள் உள்ளன. இதில் 11-வது வார்டு புளியஞ்சோலை பகுதியில் கு ண்டும் குழியுமான சாலையால் மழைநீர் தேங்கி செல்வதற்கு வழி இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக சாலை வசதி அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பேரூராட்சியினரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், பேரூராட்சி நிர் வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எஸ்டிபிஐ கட்சியினர் நகர தலைவர் ரஹ்மத்துல்லா தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ட ம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேரூராட்சி தலைவர் முருகேசன் பே ச்சு வார்த்தை நடத்தி சாலை வசதி அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியின் அடிப்படையில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News