அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
- அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் நடந்தது
அறந்தாங்கி,
அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக வீட்டுமனை பட்டா மற்றும் குடிநீர் சாலை வசதி கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமை வகித்து உரையா ற்றினார்.
அப்போது ரெத்தின கோ ட்டையிலிருந்து பட்டு க்கோட்டை சாலை வரை தார்ச்சாலை செப்பனிட வேண்டும், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் சாலைகளை செப்பனிட வே ண்டும், ஆதிதிரா விடர்களுக்கு மயானச் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விளக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. ஒன்னியச் செயலாளர் தென்றல்க ருப்பையா, நகரச் செயலர்ளர் கணேசன், சிஜடியு ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் கர்ணா, மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு, வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் அலாவுதீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.