குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
- கண்டியாநத்ததிதில் இருந்து செல்லும் சாலைகள் அனைத்தும் படுமோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு
- மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு
பொன்னமராவதி,
பொன்னமராவதி அருகே பள்ளம் படுகுழியுமாக கிடக்கும் சாலையினை சீர் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்ததில் இருந்து ஆலவயல் செல்லும் சாலை கண்டியாநத்ததில் இருந்து உலகம்பட்டி செல்லும் சாலை கண்டியாநத்ததில் இருந்து புதுப்பட்டி வழியாக பொன்னமராவதி -உலகம்பட்டி இணைப்பு சாலைக்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்து செல்லமுடியாத வகையில் ஊரில் இருந்து நான்கு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது இதனால் இந்த சாலைகளில் எந்த வாகனமும் செல்லமுடியாத வகையில் உள்ளது.இந்த சாலை சீர் செய்யக்கோரி; அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இந்த சாலைகள் சரிசெய்ய படவில்லை எனவே இந்த சாலைகளை உடனடியாக சீர்செய்ய கோரி வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி காலை 9 மணிக்கு பொன்னமராவதி-உலகம்பட்டி சாலையில் க.புதுப்பட்டி விளக்கில் கண்டியாநத்தம் க.புதுப்பட்டி கேசராப்பட்டி பூதன்வளவு ஆகிய கிராம மக்கள் ஒன்றினைந்து சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.