உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் தே.மு.தி.க.வினர் போராட்டம்

Published On 2023-04-04 13:51 IST   |   Update On 2023-04-04 13:51:00 IST
  • ஆவின் பால் தட்டுப்பாட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
  • கண்ணில் கருப்பு துணிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

அறந்தாங்கி, 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆவின்பால் தட்டுப்பாட்டைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்ணில் கருப்பு துணிக்கட்டி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பால்தட்டுப்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் தெற்கு மாவட்டச் செயலாளர் மன்மதன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு எதிராகவும், அதனை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் மணிகாந்த், நகரப் பொருளாளர் ஆனநத், புதுக்கோட்டை நகரச் செயலாளர் பரமஜோதி,நகர்மன்ற உறுப்பினர் ரூபினி, மாவட்ட மகளிர் அணி அனிதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News