உள்ளூர் செய்திகள்

தபால் அனுப்பும் போராட்டம்

Published On 2023-07-24 13:28 IST   |   Update On 2023-07-24 13:28:00 IST
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்
  • மணிப்பூர் பாலியல் கொடுமையை கண்டித்து அனுப்பப்பட்டது

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நரேந்திர மோடிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிபிஐ மாவட்டத்துணைச் செயலாளர் ராஜேந்திரன்,தேசியக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பவிதாரணி,ஏஐடியுசி மாவட்ட செயலாளர் பெரியசாமி,முன்னாள் மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி,சிபிஐ நகர செயலாளர் அஜய் குமார்கோஷ், ஒன்றிய தலைவர் வீராச்சாமி, ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாகிகள் அஜித்,பாரதிராஜன், பிரசாத்,ஹரி,கார்த்திக், பாலசுப்பிரமணியன், கண்ணன், பவிதிரன், ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், சிபிஐ நகரத் துணைச் செயலாளர் பாலமுருகன், சாலையோர வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜேந்திரன், ராஜபகதூர்,கீர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News