உள்ளூர் செய்திகள்
மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
- மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த சிங்காரத்தின் மனைவி மாரியம்மாள்(வயது 60). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மாரியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.