உள்ளூர் செய்திகள்
- நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்
- இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் அன்புச்செல்வி (வயது 21). இவர் இலுப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புச்செல்வி சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அன்புச்செல்வி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தூர பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.