உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை கடைவீதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-11-06 14:35 IST   |   Update On 2023-11-06 15:04:00 IST
  • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, தாலுகா தலைமையிடமாகவும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் விளங்குகிறது. .
  • சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, தாலுகா தலைமையிடமாகவும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் விளங்குகிறது.

மேலும் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் ஒரு வளர்ந்து வரும் நகரமாகவும் திகழ்கிறது. தினசரி கந்தர்வகோட்டைக்கு அரசு அலுவலர்கள், மற்றும் பள்ளி ,கல்லூரி, மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கந்தர்வகோட்டை முக்கிய கடைவீதியானது தஞ்சை மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இதனால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் நாட்களில் மக்கள் அதிகம் இந்த சாலையில் கூடுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News