உள்ளூர் செய்திகள்

மாயமான முதியவரின் எலும்பு கூடு மீட்பு

Published On 2023-01-10 12:42 IST   |   Update On 2023-01-10 12:42:00 IST
  • கண்மாயில் அழுகிய நிலையில் உடல்...
  • காரையூர் போலீசார் விசாரணை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் பெரிய கண்மாயில் முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் எழும்புக்கூடாக கிடந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்குள்ள காரையூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காரையூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, உயிரிழந்தவர் காயாம்பட்டியை சேர்ந்த ராமையா (வயது 70) என்பது தெரியவந்தது .இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சடையம்பட்டிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரையூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று ராமையா உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து காரையூர் காவல்துறையினர் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. 

Tags:    

Similar News