உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மெய்யநாதன் குளத்தை ஆய்வு செய்தார்

Published On 2023-07-25 12:17 IST   |   Update On 2023-07-25 12:17:00 IST
  • கள்ளுகுண்டு கரைகுளத்தை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்
  • நடைபாதை, மின்விளக்க அமைக்க அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டார்

ஆலங்குடி,

ஆலங்குடியில் புரணமைக்கப்பட்டு வரும் கள்ளுகுண்டு கரை குளத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லுக்குண்டு கரை ஊரணி புனரமைக்கப்பட்டு வருகிறது. குளத்தை சுத்தம் செய்து ஆழப்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீரை நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரப்ப ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்றும் நடை பயிற்சி செல்வதற்கு ஏதுவாக அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை அமைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் உத்தரவிட்டார். பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சையது இப்ராஹிம், உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News