உள்ளூர் செய்திகள்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Published On 2023-11-07 13:19 IST   |   Update On 2023-11-07 13:19:00 IST
  • புதுக்கோட்டையில் கால்நடைகளுக்கு 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் நடைபெற்றது
  • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திருமலைரா யசமுத்திரத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், கால்நடைகளுக்கு 4 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார்.சிறந்த கிடாரி கன்று வளர்ப்போருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும், சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு விவசாயி விருதுகளையும், பயனாளிகளுக்கு தாதுஉப்பு கலவைகளையும் வழங்கினார்.பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை களுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், அனைத்து பசுக்களுக்கும், எருமைகளுக்கும் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 38 குழுக்கள் அமைத்து 3,21,926 கால்நடை களுக்கு இலவசமாக இன்று முதல் தொடங்கி தொடர்ச்சி யாக 21 நாட்கள் அனைத்து கிராமங்களிலும் போடப்பட வுள்ளது.

நோய் தடுப்பு முறைக ளான, நோய் பாதித்தவுடன் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் அலுவல ரிடம் தெரிவிக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடை களை உடனடியாக அகற்றி தனியே வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. கொட்டகையினை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். நோயுற்ற பகுதியிலிருந்து புதிய கால்நடைகளை வாங்க கூடாது.வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி போட வேண்டும். நோய் பாதித்த கறவை மாடு பாலை கன்றுகளுக்கு அளிக்க கூடாது. சிறந்த பராமரிப்பு, தடுப்பூசி மட்டும் இந்நோயினை தடுக்க உகந்த வழி ஆகும் என்றார்.

இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (கால்ந டைத்துறை) ராமச்சந்திரன், கால்நடை உதவி மருத்து வர்கள் தெட்சி ணாமூர்த்தி, தினேஷ்குமார், பிரபு, சுப்ரமணியன், அபிநயா, விக்னேஷ்,ரவிச் சந்திரன், தாசில்தார் கவியரசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News