உள்ளூர் செய்திகள்

சடலத்துடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போராட்டம்

Published On 2023-07-19 12:28 IST   |   Update On 2023-07-19 12:28:00 IST
  • பொன்னமராவதியில் சடலத்துடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • மயானத்தில் புதைக்க திடீர் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டம்

பொன்னமராவதி,

பொன்னமராவதி அருகே உள்ள பி உசிலம்பட்டி ஊராட்சி ஏனமேடு பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (65) என்ற முதியவர் உடல் நலக்குறைவின் காரணமாக இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் அங்குள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது அந்த இடத்தினை தனிநபர் ஒருவர் பட்டா பெற்றுள்ளார் எனக் கூறி வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தடுத்துள்ளனர்.இதனை அடுத்து இறந்து போன அழகர்சாமியின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பொன்னமராவதி பூலாங்குறிச்சி வேகுபட்டி நால்ரோடு பிரிவு சாலையில் இறந்தவர் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் உதவி கலெக்டர் திருஞானம் மற்றும் பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், டிஎஸ்பி அப்துல் ரகுமான் ஆகியோர் போராட்டம் நடத்தியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் நாளை தாசில்தார் அலுவலகத்தில் பேசிக் கொள்ளலாம். தற்பொழுது வருவாய்த் துறையால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறந்தவர் உடலை அடக்கம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News