உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-09-07 14:57 IST   |   Update On 2023-09-07 14:57:00 IST
  • போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
  • பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோவிலை சேர்ந்தவர் சரவணன் மகன் மணிகண்டன் (வயது 23). சிவகங்கை மாவட்டம், புதுவயல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் பிரதீபா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் பிரதீபாவை காணவில்லை என்று அவரது தாய் உமா சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன்-பிரதீபா இருவரும் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து ஆலங்குடி போலீசார் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் காதல் ஜோடி இருவரையும் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News