அறந்தாங்கியில் வாழ்வியல் திறன் பயிற்சி
- அறந்தாங்கியில் வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அலுவலர் அப்துல்ரஹ்மான் கலந்து கொண்டு தீயின் வகைகள், அது பரவும் விதம், அவற்றை எவ்வாறு அணைப்பது குறித்து விளக்கினார்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டார வளமைய அலுவலகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு வட்டாரக்கல்வி அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்(பொ) செல்வராஜ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அலுவலர் அப்துல்ரஹ்மான் கலந்து கொண்டு தீயின் வகைகள், அது பரவும் விதம், அவற்றை எவ்வாறு அணைப்பது குறித்து விளக்கினார்.
அதனை தொடர்ந்து மருத்துவர் பிரியதர்ஷினி ஆரோக்கிய வாழ்வு குறித்தும், வழக்கறிஞர் இளவரசி சட்ட ஆலோசனைகளையும் வழங்கினர். பயிற்ச்சியின் போது ஆசிரியர் பயிற்றுனர்கள் குணசீலன், ஸ்டெல்லா, இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட இயன்முறை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் ஆறுமுகம் செய்திருந்தார்.