உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்

Published On 2023-06-16 12:26 IST   |   Update On 2023-06-16 12:26:00 IST
  • பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
  • இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நாள்தோரும் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தில் உள்ள கிள்ளிடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ஒரே நேரத்தில் கிராமமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணமான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்க தொடங்கினர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.

Tags:    

Similar News