உள்ளூர் செய்திகள்

பனை வெல்லம் விற்பனை கூட்டுறவு மையத்தில் கதர் கிராம தொழில் வாரிய தலைமை அலுவலர் ஆய்வு

Published On 2023-02-11 14:56 IST   |   Update On 2023-02-11 14:56:00 IST
  • பனை வெல்லம் விற்பனை கூட்டுறவு மையத்தில் கதர் கிராம தொழில் வாரிய தலைமை அலுவலர் ஆய்வு செய்தார்
  • பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 5 இலட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 20 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவ ட்டம், நகராட்சி க்குட்பட்ட கோவில்பட்டியில், தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் மூலம் பனை வெல்லம் பொருட்கள் பேக்கிங் செய்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்புதல், கும்பகோணம் மற்றும் விழுப்புரம் மண்டத்திற்குட்பட்ட அரசு பேருந்துகளை தூய்மை செய்வதற்காக பனை துடைப்பான்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. மேலும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 5 இலட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 20 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர்சங்கர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அலுவலக மற்றும் உற்பத்தி கூட கட்டடங்களை புதுப்பிக்கும் வகையில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மாநில இணையத்தின் சொந்த நிதியிலிருந்து அமைக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைவில் முடித்திடவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிக அளவிலான பொதுமக்கள் பெற்று பயனடையவும் நடவடிக்கை மேற்கொள்ள கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர்அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மண்டல துணை இயக்கு நர்கள் ஜி.பாலகுமரன் (திருச்சி), அருணாச்சலம் (மதுரை), உதவி இயக்குநர் பி.கோபாலகிருஷ்ணன், திட்ட அலுவலர் என்.ஆறுமுகம், வட்டாட்சியர் விஜய லெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News