உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 6.5 புவுன் சங்கிலி பறிப்பு

Published On 2022-11-24 14:58 IST   |   Update On 2022-11-24 14:58:00 IST
  • பெண்ணிடம் 6.5 புவுன் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • வீட்டில் பெற்றோருடன் தூங்கிய போது சம்பவம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள காளையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சுமித்ரா (வயது 23).

குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக கணவனை பிரிந்து காளையன்தோப்பில் உள்ள தனது தந்தை ராமலிங்கம் வீட்டில் சுமித்ரா வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு சுமித்ரா, தந்தை ராமலிங்கம் தாய் ஜெயலட்சுமி, சகோதரி சுமதி ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அதிகாலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உறங்கி கொண்டிருந்த சுமித்ரா கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் சங்கிலியை அறுத்து சென்று விட்டனர்.

இச் சம்பவம் குறித்து ராமலிங்கம் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News